மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா அலையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 58 வயதுடையவர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 29.05.2021 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்
இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 27 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.