போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி .எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் குமாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா விற்பனை மற்றும் பாவனையின் ஈடுப்பட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இருவரையும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில்
ஆஜர்படுத்தபடவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி. கருணாரத்னவின் பணிப்புரையின் கீழ்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.