Home மட்டக்களப்பு செய்திகள் மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்குக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையிலிருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதுடன், ஒருவரின் சடலத்தைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு - செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம் மட்டக்களப்பு - செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பு - செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பு - செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம் மட்டக்களப்பு - செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெண்களிற்கு எதிரான வன்முறையாளர்கள்… கலாசார சீரழிவில் ஈடுபடும் பெண்களிற்கு எச்சரிக்கை; 7 நாளில் தண்டனை: யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!
Next articleவடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயம்