மட்டக்களப்பில் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் குழுமியமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலில் பிதிர்க்கடன் தீர்க்கும் வழிபாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்பில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஜீ.காசிலிங்கம் இந்த விடயம் பற்றி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாடு நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றமை துரதிஸ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.