மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணிக்க 100 மில்லியன்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மஹரகம நகரசபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் வெளியான காணொளியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பிரதமரின் செலவினத் தலைப்பின் கீழ் இதனை நிர்மாணிப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின்

இல்லத்தை புனரமைக்க ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
இதற்கமைய, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது நாடளாவிய ரீதியில் ஆளும் கட்சியின் பல அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..