மகரம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
(உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதம்)
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வருடம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பொருளாதார மேன்மையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
13/4/2022 வரை குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்துசேரும்.
விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு. இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத தன லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு உயரும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். 13/4/2022 க்கு பிறகு முயற்சிகளில் சிறுசிறு தடைகள் பிரச்சினைகள் வந்தாலும் வெற்றி பெறலாம்.
மனக்கவலை, எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நன்மை உண்டு. உடன்பிறப்புகளால் சிறு மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் உயரதிகாரிகள் சக ஊழியர்களால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தாமதமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் காலதாமதத்தை தவிர்த்து அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது.
பரிகாரம்: குச்சனூரில் உள்ள ஸ்ரீ சனிபகவானை சனிக்கிழமையில். சென்று வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
மகரம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மகரம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மகரம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்