போராட்ட உறவுகளை கேவலப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்!!

காலி முகத்திடலில் புதிதாக உருவாகியுள்ள எழுச்சிக் கிரமமான ‘கோட்டாகோகம’ பகுதியில் தங்கியுள்ள இளையவர்கள் பற்றி இணையத்தில் போலி அவதூறு செய்திகளை வெளியிடுபவர்கள் பற்றி அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரச ஆதரவாளர்கள் இந்த போலிச்செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

கோட்டா கோ கம என பெயரிட்டு, காலி முகத்திடலில் இளையவர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அங்கு கூடாரங்களிற்குள் ஆண்களும், பெண்களும் பாலுறவு கொள்கிறார்கள், போராட்டத்திற்கு சென்ற உங்கள் மகள்கள் சமூப்பிறழ்வில் ஈடுபடுகிறார்கள் என பெற்றோர்களை எச்சரிக்கும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

இதன்படி, காலி முகத்திடல் கூடாரங்களுடன், வீதியில் ஆணுறைகள் சிதறிக்கிடக்கும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தும்கூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஆணுறைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளாகி, வீதியில் ஆணுறைகள் சிதறின. 2021 இல், இந்த சம்பவம் நடந்தது.

இந்த புகைப்படத்தை, காலி முகத்திடலில் எடுக்கப்பட்டதாக போலியாக அரச ஆதரவாளர்கள் பரப்பி வருவது அம்பலமாகியுள்ளது.

போராட்ட உறவுகளை கேவலப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்!! போராட்ட உறவுகளை கேவலப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்!! போராட்ட உறவுகளை கேவலப்படுத்தும் அரச ஆதரவாளர்கள்!!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..