இன்று (16) முற்பகல் காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு சில பொலிஸ் ட்ரக் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
பின்னர் சமூக வலைத்தளங்களில் அது தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடுத்து குறித்த இடத்திலிருந்து அவை தற்போது அகற்றப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,
ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது ட்விற்றர் கணக்கில் குறித்த அறிக்கையை பகிர்ந்துள்ளதோடு, பின்வரும் விடயத்தை தெரிவித்துள்ளார்.
“மக்களின் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் சட்டத்தரணிகள் சங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்தகைய முயற்சிகள் நாடு, அதன் ஜனநாயகம்,அதன் பொருளாதாரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
The BASL views with grave convern any attempt to disrupt in whatever manner what is a peaceful protest by the people of this country. Any such attempt will have grave repercussions for the country, its democracy, its economy and the rule of law. pic.twitter.com/ewyo5VCosZ
— Saliya Pieris (@saliyapieris) April 16, 2022