Home Local news போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்

போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்

ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன.

அந்தத் தடைகளை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். தடைகளை தகர்த்தெறியவிடாமல் பொலிஸார் கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

எனினும், தடைகளை தகர்த்தெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை வந்தடைந்தனர். அந்த வாயிலுக்கு முன்பாகவிருந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோக வாகனத்தையும் தம்வசப்படுத்தியுள்ளனர். அந்த வாகனத்தின் மேலே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறிக்கொண்டனர்.

இதேவேளை, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், மாளிகையை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், அங்கிருந்து பெரும் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பொலிஸ் அதிகாரியின் வலது கையை கடித்த இராணுவ சிப்பாய் கைது
READ MORE >>>  மீண்டும் ஒரு சிறுமி கொடூரக் கொலை!? காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு - பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு
Previous articleதலைக்கவசத்தை கழற்றி வீசி ஆர்ப்பாட்டத்தில் இணைந்த பொலிஸ்
Next articleபோராட்ட களத்தில் மக்களுடன் கைகோர்த்த இராணுவ வீரர்