போதைப்பொருள் வியாபாரியான இளம்பெண் ரூ.17,936,500 பணத்துடன் கைது!

31 வயதுடைய பெண் ஒருவர் ரூ.17,936,500 பணத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணத்தை அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

கொடகமவிற்கு அருகிலுள்ள அதுருகிரியவில் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மே 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 294 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​3.3 கிலோகிராம் ஹெரோயினுடன் 58 வயதுடைய மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இதேவேளை, சந்தேக நபர்கள் இருவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர்களுடன் தொடர்பில் இருந்த 31 வயதான இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து ரூ.17,936,500 பணமும் மீட்கப்பட்டது.

இந்த பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது டுபாயில் உள்ள பெண்ணின் கணவர், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..