திருகோணமலை தலமை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் கொரோனா தொற்று க்குள்ளாகி உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
கடந்த சில நாட்களாக சராசரியாக நாள் ஒன்றிற்கு மூவர் வீதம் இனம் காணப்படுவதாகவும் இதுவரை 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 16 கைதிகள் இனம் காணப்பட்டதாகவும்,
அதனை தொடர்ந்து அறிகுறிகள் தென்பட்ட பொலிசார் சிலர் தாமாக முன்வந்து பரிசோதித்த வேளையில் கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்களில் திருகோணமலை தலமை பொலிஸ் பிரிவில் பிரதான பொலிஸ் அதிகாரி ஒருவரின் வாகன ஓட்டுனர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகி இருந்தமை தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான அனைவரும் ஈச்சிலம்பற்று கொரோனா பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் 22 வயதான யுவதி ஒருவர் கொரோனா தொற்றுடன் இனம்காணப்பட்டு,
கந்தக்காடு கொரோனா பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவரது கணவர் திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரபல கொத்து ரொட்டி கடையில் பணிபுரிவதாகவும்,
நான்கு வயதான குழந்தை ஒன்று சிறுவர் கல்வி நிலையம் சென்று வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவங்கள் ஊடகங்களிற்கு வெளிக்காட்டப்படவில்லை.
மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவோ,
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதா என வினாவும் போது இல்லை என்றே தெரியவருகின்றது.
தற்போதய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இந்நிலை இன்னும் மோசமாகலாம்,
என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார உத்தியோகஸ்தர் ஒருவர் jaffna7 இற்கு தெரிவித்துள்ளார்.