இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பாரவூர்தியும் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தொிவித்தார்.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் பாரவூர்தி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்பி நோக்கிச் செல்லும் பேருந்தும், களனியை நோக்கிப் பயணித்த பாரவூர்தியுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.