தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் உலக அழகியாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.
இப்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் பிரபல பாலிவூட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகள் உடன் சென்று இருந்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதில் ஐஸ்வர்யா ராய் முகத்தை பார்த்துவிட்டு அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.