லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்”. இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி மற்றும் மைனா நந்தினி நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரிவியூ வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, கோவையில் நடந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) முடிவடைந்தது.
விக்ரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம் படத்தின் OTT-ஐ தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பும் உரிமையை Disney Plus Hotstar பெற்றுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அறிவிப்பை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.எஃப்.ஐ., கமல்ஹாசனின் புகைப்படத்தை ஸ்டார் அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளது.