தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் பீஸ்ட் படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்படத்தினை தில் ராஜ் தயாரிப்பில் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பீஸ்ட் படத்திற்காக சுமார் 80 கோடி அளவில் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
தளபதி 66ல் 100 கோடியாக பேசப்பட்டுள்ளது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் விஜய் தன்னுடைய தாய் தந்தையுடன் சண்டை போட்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற சர்ச்சை செய்திகளும் வெளியாகி வருகிறது. அதற்கேற்ப விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் பேட்டிகளில் விஜய் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியின் விஜய் இந்த விஷயத்தை எங்களுக்கு நிறைவேற்ற வேண்டுன்னு என்ன கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், மாசத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வரவேண்டும். 30 நிமிடம் எங்களுடன் பேசவேண்டும், ஹாய்ப்பா, ஹாய்ம்மா என்று ரெண்டு தட்டு தட்டணும் என தெரிவித்தார்.
இது ஒன்றும் சின்ன விஷயம் கிடையாது, ஒரு மாசத்துக்கு ஒருமுறை கேட்கிறேன். இதுதான் எனக்கு பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார். கூறியதுடன் உருக்கமாக கண்ணீரும் விட்டுள்ளார் விஜய்யின் தந்தை.
இதனை பலர் கோடிக் காசுக்காக அம்மா, அப்பாவை கண்டுக்கொள்ளாமல் இருந்தா எப்படி என்று பல மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெத்தவங்கள ஒதுக்கி வெட்சிட்டு நாம நூறு கோடி சம்பாதிச்சாலும் நாம செஞ்ச பாவம் காலத்துக்கும் கால சுத்தும்.. வேண்டாம் @actorvijay னா.. அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குங்க. ??#Thalaivar169 #AK61 #vaathi #Valimai #Annaatthe pic.twitter.com/Ep5g8yFRVH
— Spicy Chilli (@spicychilli4u) May 5, 2022