ராகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம்பெண் வைத்தியர் தனது விடுதியில் ஆடைமாற்றும்போது, புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் வைத்தியரை ராகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 8.45 மணியளவில் பெண் மருத்துவர் தனது விடுதியில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஆண் வைத்தியர் ஒருவர் புகைப்படங்களை எடுத்ததாக பொலிசாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றுபவர்.
இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.