பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் 47 வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண்ணின் சடலம் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூண்டுலோயா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேககத்தின் அடிப்படையில் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்