யாழில் பெண் குரலில் பேசி அந்தரங்க புகைப்படங்களை பெற்று பின்னர் அதை வைத்து மிரட்டி வசூல்..! வசூல் ராஜாவை பொறிவைத்து பிடித்த பொலிஸார்

தொலைபேசியில் பெண் குரலில் பேசி அந்தரங்க புகைப்படங்களை வாங்கி அதனை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்துவந்த ஆசாமியை யாழ்.நகரில் பொலிஸார் பொறிவைத்து பிடித்துள்ளனர்.

யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு யாழ்.நகரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது பெண் ஒருவர் பேசியுள்ளார். அது பின்னர் பழக்கமாக இருவரும் தொடர்ந்து உரையாடியுள்ளனர்.

மேலும் இருவரும் அந்தரங்க புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசியில் பேசிய பெண் குரல் அந்த அந்தரங்க புகைப்படங்களை வைத்து சுன்னாகத்தை சேர்ந்த நபரை மிரட்டியுள்ளதுடன்,ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளது.

பின்னர் மீண்டும் மிரட்டியதுடன் மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்ட நிலையில் சந்தேகமடைந்த குறித்த நபர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

பெண் குரலில் பேசி

அதன் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசிய பெண் குரல் கேட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிட முடியாது எனவும் நோில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்பட்டு பொலிஸ் புலனாய்வு பிரிவு யாழ்.நகரில் பொறிவைத்து காத்திருந்த நிலையில் 26 வயதான வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணத்தை பெறுவதற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை அம்பலமாகியுள்ளதுடன், இதுவரை 4 போிடம் பேசி 4 லட்சத்திற்கும் மேல் பணம் வசூலித்தமை அம்பலமாகியுள்ளது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் கைதானவரிடமிருந்து 4 தொலைபேசிகள், ஒரு லட்சம் பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..