Home CRIME NEWS பெண்ணின் கழுத்தில் கைவைத்ததால் நையப்புடைக்கப்பட்ட இளைஞன்

பெண்ணின் கழுத்தில் கைவைத்ததால் நையப்புடைக்கப்பட்ட இளைஞன்

பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய திருடனை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து, நையப்புடைத்துள்ளனர்.

சந்தேகநபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கம்பளை கிரிந்த கல்கெடியாவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றார்.

பெண்ணின் கழுத்தில் கைவைத்ததால் நையப்புடைக்கப்பட்ட இளைஞன்

காலையில் வீட்டின் முன்பாக கூட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம், முகவரியொன்றை கேட்பதை போல பாவனை செய்து, மூன்றரை பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடினார்.

பெண்ணின் கூச்சலை கேட்டு, அந்த பகுதி மக்கள் திருடனை விரட்டிப் பிடித்து, மடக்கிப் பிடித்தனர். திருடனை மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்தனர். பின்னர் கம்பளை பொலிசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

சந்தேக நபர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். ஒரு கிராம் போதைப்பொருள் தினமும் பாவிப்பவரென்றும், அதற்காக ஒரு நாளைக்கு 5000 ரூபா தேவை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளளார்.

சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் செலவு 52 மில்லியன் டொலர், தாமத கட்டணம் 40 மில்லியன் டொலர்
Next articleயாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!