யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரேயொரு சுவரொட்டி மட்டும் ஒட்டப்பட்டுள்ளது. இதை யார் ஒட்டியது என்பது குறித்து பொலிசார், இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
,இது யாரேனும் தனிநபர்களின் நடவடிக்கை அல்லது அரசியல் கைதிகளின் விடுதலையை விரும்பாத தரப்புக்களின் கைவரிசையாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.