Home Local news பூட்டிய வீட்டுக்குள் இரு பெண்களின் சடலங்கள்

பூட்டிய வீட்டுக்குள் இரு பெண்களின் சடலங்கள்

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எல்பிட்டிய, கனேகொட, தெரங்கொட பஹல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய உஹனோவிடகே மல்லிகா என்ற திருமணமான பெண் ஒருவரும், எல்பிட்டிய, ஓமட்டாவைச் சேர்ந்த, 80 வயதான உடுகமசூரிய ஞானவதி என்ற திருமணமாகாத பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரு பெண்களும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த இரு பெண்களின் மரணம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிளிநொச்சியில் மதுபான விற்பனை விடுதிக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம்!
Next articleயாழ்.உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி லொறியை பறித்துச் சென்ற நபர் கைது!