Home திருகோணமலை செய்திகள் பூஜை அறையில் பெற்றோல்!! பெண் பலி!

பூஜை அறையில் பெற்றோல்!! பெண் பலி!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்..

அத்துடன் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ரவீந்திரன் சுதாசினி (47) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் நேற்று பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே வீசிய போது அந்த அறைக்குள் இருந்த பெற்றோல் போத்தல் மீது விழுந்தமையால் தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அரை போத்தல் பெற்றோல் மட்டுமே பூஜை அறைக்குள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஆசிரியையுடன் ‘பழகிப் பார்த்த’ அதிபர்; நிர்வாணமாக்கி அடித்து வீடியோ பதிவு செய்த கணவன்!
READ MORE >>>  பதில் நிதி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியமனம்
Previous articleகண்களில் புரை பிரச்சனையா?? எப்படி குணப்படுத்துவது??
Next articleகிளிநொச்சியில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!