புத்தாண்டு விருந்திற்குச் சென்ற மஹிந்தானந்தவின் ஆதரவாளர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆதரவாளர்களான இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு இளைஞர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் அமல் பிரியங்கர நேற்று (15) பிற்பகல் நாவலப்பிட்டி ஹையன்போட் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு விருந்தொன்றை நடத்தினார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விருந்தில் கலந்து கொண்டு மோதலுக்கு முன்னதாக ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ,கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்சி ஆதரவாளரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஆதரவாளரும் விருந்தில் கலந்து கொண்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர்களையும் தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி இளைஞர்களின் உறவினர்கள் (16) கடந்த 16ஆம் திகதி பிற்பகல் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..