புத்தளத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை

புத்தளத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை

புத்தளம் – வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று(24) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வண்ணாத்திவில்லுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..