Home Local news புதையல் தோண்டிய 6 பேர் கைது!

புதையல் தோண்டிய 6 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருள் சட்டத்தை மீறியும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 15 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹீனியாகல பொலிஸ் பிரிவில் பரகஹாகல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 4 மோட்டார் சைக்கிள்களும் புதையல் அகழ்லுக்காக உபயோகிக்கப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

மேலும் ஹசலக பொலிஸ் பிரிவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரும் விசேட அதிரடிப்படையினரால் மாவத்தகம பொலிஸ் பிரிவில் வேவுட – யட்டிவில பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!
Next articleநடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களால் எகிறும் லைக்குகள்!