முல்லைத்தீவு ஐயன்கன் குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் கிராமத்தில் பதின்ம அகவை (14) சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 26 அகவையுடைய இளைஞன் ஒருவரை ஐயன்கன் குளம் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 14 அகவையுடைய பாடசாலை சிறுமி வீடடில் தனிமையில் இருந்த வேளை சிறுமியுடன் நட்பு கொண்ட குறித்த இளைஞன் கடந்த 05.07.21 அன்று சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் விருப்பத்துடன் உடல் உறவு கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து கிராமத்தின் சமூக அமைப்புக்களால் பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் 12.07.21 அன்று குறித்த இளைஞனை ஐயன்கன்குளம் பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையில் ஐயன்கன் குளம் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.