Home world news புதிதாக கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய் !! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை !!

புதிதாக கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய் !! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை !!

கனடாவின் சில பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் மூலமாக ஹெப்படைடிஸ் என்னும் நோய் பரவுவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அது தொடர்பான விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.

குறிப்பாக, ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் இந்த நோய் பரவலின் பின்னணியில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தங்களுக்கு ஹெப்படைடிஸ் நோய் உருவாகும் முன் பலரும் தாங்கள் இந்த இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

அந்த ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள், மார்ச் 5ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் நடுவில் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், இப்போது அவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

என்றாலும், ஏற்கனவே அந்த நாட்களில் அந்த ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை யாராவது வாங்கியிருந்தால், அவற்றை பிறகு பயன்படுத்தலாம் என குளிர்பதனப்படுத்தி சேமித்துவைத்திருந்தால், அவற்றை உண்ணவேண்டாம் என்றும், அவற்றை எறிந்துவிடுமாறும், சொல்லப்போனால், தாங்கள் வாங்கிய பழங்கள் எங்கிருந்த வந்தவை என்பது தெரியாதபட்சத்தில், மார்ச் மாதத் துவக்கத்தில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை வாங்கியிருந்தால் அவற்றை தூர எறிந்துவிடுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇந்த பிரச்சனை உள்ளவர்கள் யாரும் மாம்பழம் சாப்பிடாதீங்க.! அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்
Next articleகோழி இறைச்சி வாங்கச் சென்று வீடு திரும்பாத அட்டுலுகம சிறுமி சதுப்பு நிலத்திற்குள் சடலமாக மீட்பு