பீஸ்ட் Failure வலிமை ஹீட் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் ஒரே போடு !!

பிரபல தயாரிப்பாளரான கே ராஜன், சமயம் தமிழ் இணையதளத்திற்கு சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார். அதில் பீஸ்ட் படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் கே ராஜன். பீஸ்ட் திரைப்படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த கே ராஜன், முதல் நாள் 39 கோடி ரூபாய் என்றும் இரண்டாவது நாள் கொஞ்சம் குறைவு என்றும் இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் பரவாயில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் திங்கள் கிழமையிலேருந்து இதன் முழுவடிவம் தெரியும் என்ற அவர் படத்தை பார்த்து விஜய் ரசிகர்களே வேதனையில் உள்ளனர் என்று கூறினார். மேலும் கேஜிஎஃப் படத்தால் பீஸ்ட்டுக்கு அடி என்று கூறிய கே ராஜன், தன்னைப் பொறுத்தவரை தமிழ் படம் தான் வெற்றி பெற வேண்டும், கேஜிஎஃப் டப்பிங் படம் என்று கூறியுள்ளார். பீஸ்ட் என இங்கிலிஷில் பெயர் வைத்ததே தனக்கு பிடிக்கவில்லை என்றும் தமிழில் பெயர் வைத்தால் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனக்கு தன்னுடைய தயாரிப்பாளர் ஜெயிக்க வேண்டும் என்று கூறிய கே ராஜன், பீஸ்ட் திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் மட்டும்தான் வரவேற்பு உள்ளது. மற்ற மொழிகளில் கேஜிஎஃப்புக்குதான் வரவேற்பு இருக்கிறது என்றார். பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த கே ராஜன், பீஸ்ட் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் இயக்குநர்தான் என்றார்.

விஜய் இதற்கு முந்தைய படங்களில் நடித்தது போன்ற நன்றாகதான் நடித்திருக்கிறார். இயக்குநர்தான் சரியில்லை. ஒருப படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இயக்குநர்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது வரும் இயக்குநர்கள் ஒரு படம், இரண்டு படம் நன்றாக கொடுக்கிறார்கள், மூன்றாவது படத்தில் சரக்கு தீர்ந்து விடுகிறது என்றும் சாடியுள்ளார். கதைக்காக ஹீரோ இல்லை என்ற அவர் ஹீரோக்களின் பாக்கெட்டுகளில் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

ஹீரோக்கள் சக்ஸானவர்களை தான் படத்தில் வைத்துள்ளார்கள். நம்பர் ஒன் ஹீரோயின் வேண்டும், டாப் நகைச்சுவை நடிகர் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் புது இயக்குநர்களை உருவாக்குவதில்லை. வெற்றியில்தான் ஹீரோக்கள் பங்கு கொள்கிறார்களே தவிர தோல்வியில் பங்கெடுப்பதில்லை என்றும் டைரக்டர்களை நடிகர்கள் மதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அஜித்தின் விவேகம் படத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் தான் இருந்தது. பீஸ்ட் படத்திலும் துப்பாக்கி கலாச்சாரம்தான் உள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் உள்ள படம் உருப்படாது என்று அப்போதே கூறினேன் என்றும் சாடியுள்ளார் கே ராஜன்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..