தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு டாக்டர் பட இயக்குனர் நெல்சனை வைத்து பிஸ்ட் படத்தில் நடித்து வந்தார் விஜய். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மோசமான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
கதை உருபடியான விஷயம் எதுவும் இல்லை என்றும், லாஜிக்கில் கோட்டை விட்டுவிட்டார் நெல்சன் என்று பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜய்யை சரியாக பயன்படுத்தாமல் விட்டாரே என்று தளபதி ரசிகர்களே நெல்சனை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நெல்சன் சமீபத்தில் அளித்த இயக்குனர்கள் பேட்டியில் ஒரு விஷயத்தை கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாம் நினைத்தபடி ஒரு படத்தினை எடுக்க ஹீரோ ஒத்துக்க மாட்டார்கள். நமக்கு ஒரு ஸ்டைலில் படம் பண்ண வேண்டுமென்று இருக்கும் ஆனால் கமர்ஷியல் சினிமாவும் வேறமாதிரி இருப்பதால் இதை ஹீரோ ஒற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இயக்குனர் இந்த படத்தின் கதையை விஜய்க்கு சொல்லும்போது குடும்பம் கலந்த காமெடி கதையாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் அதில் சில மாற்றங்கள் செய்து ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக மாற்றுமாறு இயக்குனருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
விஜய் கால்ஷீட் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இயக்குநரும் சரி என்று சொல்லி படத்தில் சில மாறுதல்களை செய்து இருக்கிறார். இதனால்தான் படம் தற்போது தோல்வியை நோக்கி சென்றுள்ளது.
இதேபோல தளபதி 66லும் தொடக்க விழா சமீபத்தில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
மேலும், மற்ற சில விஷயங்களிலும் அளவுக்கு அதிகமாக தலையிடுவதால் என்ன செய்வது என தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் இருக்கிறார்களாம்