தளபதி விஜய்யின் ஆக்ஷன் படமான பீஸ்ட் ஏப்ரல் 13 அன்று பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியானது.நெல்சன் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ‘பீஸ்ட் ‘. விடிவி கணேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அனிருத் இசையில் ‘பீஸ்ட்’ ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பத்து வருடங்களில் சுமார் 12 படங்கள் வெளியானது அதில், துப்பாக்கி மற்றும் தெறி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றது. மற்ற படங்கள் அனைத்தும் பொருளாதார ரீதியில் நஷ்ட்டத்தை சந்தித்த படங்கள். இதில் புலி மற்றும் பைரவா போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. விஜயை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படம் தயாரிக்க முன் வரவில்லை.
புலி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சம்பள பாக்கி, மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் மேன் சம்பள பாக்கி என விஜய் நடித்த படங்களில் பணியாற்றியவர்கள் சம்பள பாக்கி விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கரணம் குறிப்பிட்ட அந்த படம் பல கோடி வசூல் செய்தது என படத்தின் தோல்வியை மறைத்து விளம்பரம் செய்து கொண்டாலும், பொருளாதார ரீதியில் படு தோல்வியை சந்தித்தது தான் காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்த மெர்சல் படத்தில், மத்திய அரசை உண்மைக்கு புறம்பாக விமர்சனம் செய்யும் வகையில், அந்த படத்தில் இடம்பெற்றிருந்த வசனம் பாஜகவினர் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது. பொதுவாக மெர்சல் படம் படுதோல்வியை சந்தித்திருக்க வேண்டிய படம், ஆனால் பாஜகவினர் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய நஷ்டத்தில் தப்பித்து கொண்டது மெர்சல் படம்.
மெர்சல் படம் விவாகரத்துக்கு பின்பு, பாஜகவை சீண்டி படம் எடுத்தால் கிடைக்கும் எதிர்மறை விளம்பரத்தினால் படம் வெற்றி பெரும் என்கிற நோக்கில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் பாஜகவினர் யாரும் கண்டுகொள்வது கிடையாது. இந்நிலையில் தற்பொழுது பீஸ்ட் படத்தில் மீண்டும் படத்தின் எதிர்மறை விளம்பரத்துக்காக நடிகர் விஜய் தனது சேட்டையை காண்பித்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
பீஸ்ட் படத்தில் ரஃபேல் விமானம் குறித்து சில சர்ச்சை கூறிய வகையில் வசனம், மற்றும் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் வருகிறது தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை பிடித்தால் ஆளும் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று பாஜக அரசை சீண்டி பார்த்துள்ள விஜய், மேலும் உனக்கு இந்தி தெரிகிறது என்பதற்காக நான் இந்தியில் பேச முடியாது, நீ தமிழ் கற்றுக்கொள் என விஜய் பேசும் வசனமும் மத்திய அரசை சீண்டுவது போன்று அமைந்துள்ளது.
ஆனால் இது குறித்து பாஜக தலைவர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது, காரணம் படத்தின் விளம்பரத்துக்காக தான் விஜய் இப்படி செய்துள்ளதாகவும், இதற்கு நாம் இடம் கொடுத்திட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் பாஜக தலைவர்கள். இந்நிலையில் விளம்பரத்துக்காக பாஜகவை சீண்டி பாஜக தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளாததால் விஜய் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்றும், மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் மொக்க படம் தான் பீஸ்ட் என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.
அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியடைந்தது. இப்படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் இன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது. படம் குறித்து பல பேட்டிகளை வழங்கிய நெல்சன் பிரமோஷன் விஷயத்தில் பொருமையாக பேசி ரசிகர்களை ஈர்த்தார்.
ஆனால் இதற்கு முன்பு நெல்சன் பல இயக்குனர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேட்டியொன்றில் நம்ம நினைச்ச மாதிரி படம் பண்ணனும்னா பெரிய ஹீரோ ஒத்துக்கமாட்டாங்க என கூறியிருந்தார்.
இந்த செய்தி பரவலாகி வரும் நிலையில் பீஸ்ட் படமும் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்து காணப்படுவதால் நெல்சன் இயக்கத்தை இனிமேல் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
Don't Blame @Nelsondilpkumar ra Luchas ? #Beast #BeastDisaster #BeastReview pic.twitter.com/87vsWn7S3i
— Roshan Vignesh (@RoshanVignesh05) April 13, 2022
KGF 2 இலிருந்து தென்னிந்தியா முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் வலுவான போட்டியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது: அத்தியாயம் 2. 2018 பிளாக்பஸ்டரின் தொடர்ச்சி வியாழன் அன்று இந்தியா முழுவதும் அசத்திவருகிறது .