Home Cinema பீஸ்ட் பட விவகாரத்தால் அஜித்தை குறிவைத்த சன் பிக்சர்ஸ்.? அஜித் எடுத்த அதிரடி முடிவு !

பீஸ்ட் பட விவகாரத்தால் அஜித்தை குறிவைத்த சன் பிக்சர்ஸ்.? அஜித் எடுத்த அதிரடி முடிவு !

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் AK-61 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மௌண்டில் செட் போட்டு படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்த படத்தில் அஜித் அவர்கள் வங்கி கொள்ளையனாக நடிக்கிறாராம். இதற்காக் அவர் உடல் எடை குறைத்து வெள்ளை நிற தாடியுடன் அட்டகாசமாக காட்சியளிக்கிறார். அவரின் அந்த புகைப்படங்கள் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வினோத் படத்தளத்தில் யாரும் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்று கராரா சொல்லிவிட்டாராம். காரணம் அண்மையில் வெளிவந்த பீஸ்ட் படப்பிடிப்பில் சில நபர்கள் அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து இணையத்தில் பரப்பி விட்டனர்.

இதே நிலைமை இங்கேயும் வந்துற கூடாதுனு அலார்ட்டா இருக்கிறார் தலைவர். படம் திரைக்கு வருவதற்கு முன் படத்தை பற்றிய எந்த ஒரு புகைப்படமும் லீக் ஆகிட கூடாதுங்குற முயற்சிதான் இந்த மொபைல் தடை. எப்படியும் விட்டுருவாங்களா நம்ம ஆளுங்க..?

இதனையடுத்து தற்போது அஜித்தின் 63-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த அணைத்து படங்களும் வசூல் ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் தீ வைப்பு!?
Next articleதிடீரென ட்விட்டர் டிபியை மாற்றிய ரஜினிகாந்த் !! சமரசம் செய்த நபர் யார் ? பின்னணி என்ன?