நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட் ‘ படத்தில் விஜய் ரா ஏஜென்டாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் மூன்றாவது முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ளார், மேலும் அவரது இசை படத்திற்கு நன்றாக வேலை செய்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தோடு ரிலீஸான கே ஜி எஃப் 2 படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களை ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. இந்நிலையில் தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் பீஸ்ட் படம் வெற்றியா தோல்வியா என்று கேட்கப் பட்டுள்ளது.
இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் நான் இங்கு அரசியல் ரீதியாக வந்துள்ளேன். படம் வெற்றியா தோல்வியா என்பதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
பலரும் பீஸ்ட் படத்தால் பெரிய நஷ்டம் என சொல்லி வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Exclusive !
Beast படம் நீங்கள் வெளியிட்டிருந்தீங்க பட் எதிர்பார்த்த வரவேற்பு பெறல முதல் 3 நாள் வசூல் என்ன.
உதய் பி லைக் மவனே நான் சிக்கினா தானேடீ ???#BeastDisaster #IndustryDisasterBeast pic.twitter.com/YYOsKihOiw
— Dinu (@Dinu_Akshiii) April 19, 2022