விஜயின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. உலகம் முழுக்க இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் வந்துகொண்டு இருக்கிறது. படம் காமெடி ஆக்சன் கலந்து விஜய்க்கு ஏற்றவறு வெளியாகியுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து அதிகாலை 4 மணிக்கு படத்தை பார்த்தனர். அதில் பல தியேட்டர்களில் இரவு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது.
திருநெல்வேலி தியேட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒன்றாக பேனர், கட்டவுட் அடித்து பீஸ்ட் படத்தை வரவேற்றனர். அப்போது விஜய் பாடல்கள் ஒலித்து வந்த சமயம் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா டோலுமா பாடலை போட்டு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
விஜய் படம் ரிலீசான சமயத்தில் விஜய் மற்றும் அஜித் பட கட்டவுட் ஏற்றி, அஜித் பாடலை போட்டு ஆடிய ரசிகர்கள் மனபக்குவம் அனைவரையும் ஆச்சர்யமூட்டியது. இது போலவே இருவர் படத்திற்கும் இருவரது ரசிகர்களும் ஒன்றாக சென்று பார்த்தால் நிச்சயம் ஓர் நல்ல சினிமா சூழ்நிலை வளரும் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Believe me ,It's Vijay Movie FDFS ?
Enjoying by AK fans with #AK songs !!
Scene from Tirunelveli @RamCinemas , #AKFort pic.twitter.com/WAVTgUi3Oz
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) April 12, 2022