முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தென்னியன்குளம் பகுதியில் 19 அகவையுடைய யுவதி ஒருவரை காணவில்லை என அவரது தயார் மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
19 அகவையுடைய சுதர்சினி என்ற யுவதி தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்
கவர்சிகரமான யுவதியான இவர் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது தாயாரின் பணம் எடுக்கும் ஏரிஎம் அட்டை மற்றும் தனது உடுப்புக்களையும் எடுத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் வங்கியில் இருந்து ஏ.ரி.எம் அட்டை ஊடாக பணம் எடுக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதுடன்
குறித்த யுவதி தனது தொலைபேசியின் தொடர்பினை நிறுத்தி வைத்துள்ளமையினால் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது