Home Jaffna News பிரித்தானியாவிலிருந்து யாழ் வந்த வைத்தியர் உயிரிழப்பு: கொரோனா தொற்று உறுதி

பிரித்தானியாவிலிருந்து யாழ் வந்த வைத்தியர் உயிரிழப்பு: கொரோனா தொற்று உறுதி

பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (80) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் முன்னாள் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகராக பணியாற்றியதாக உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய அவர் நேற்றுமுன்தினம் (16) வீட்டில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்மை தெரிய வந்தது.

அதனால் முதியவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் லண்டனில் பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான அட்டையை வைத்திருந்துள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு
Next articleயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு