இந்திய சினிமாவில் இந்த வாழ்க்கை வரலாற்று படங்கள் என்பது சமீப வருடங்களாக அதிகரித்து கொண்டே தான் வருகிறது அதிலும் பாலிவுட் சினிமா தான் அதில் அதிக ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். எம்.எஸ்.தோனி, சச்சின், 83 என பல படங்கள் வெளியாகிவிட்டன.
இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி என பலர் நடித்து இருந்தனர். கருணாநிதியாக நாசர் என பலர் நடித்து இருந்தனர். தற்போது அதே போல அடுத்ததாக இன்னோர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராக உளள்தாம்.
அது வேறு யாருடையதுமில்லை. தற்போதைய தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்க கதைக்களம் அமைத்து வருகின்றனராம். இதற்காக தமிழ் இயக்குனர்கள் 4 பேர் கதைக்களத்தை உருவாக்கி வருகின்றனராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரிக்க கூட அதிக வாய்ப்பிருக்கிறது.