Home sri lanka tamil news பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன்...

பிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது தொடர்பில் சிங்கள இளைஞன் ஒருவர் காணொளி வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில், வடக்கில் உள்ள மக்களை இப்படிதான் தாக்கி இருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த (ஜனாதிபதி செயலகம்) இடத்தில் சாதாரண, அமைதியான மக்களே இருந்தனர்.

இங்கிருந்த அமைதியான மக்களை தாக்கினார்கள் என்றால், இந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களை எப்படி நடத்தியிருக்கும். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது ஆத்திரம் கொண்டிருப்பது நியாயமானது அல்லவா.

வடக்கு, கிழக்கில் தாக்குதல் நடத்தும் போது, நாம் இங்கு போர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தோம். போர் வெற்றிகளையும் பிரபாகரன் எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சிகளில் காட்டினர்.

மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டது, வடக்கு, கிழக்கில் சாதாரண மக்களை தாக்கினர் என்று கூறினார்கள். நீங்கள்(படையினர்) இப்படி தாக்கி இருக்க மாட்டீர்கள் என்று எப்படி நாங்கள் தற்போது நம்புவது.

இராணுவத்தினர், முப்படையினரும் வந்து இங்குள்ள( ஜனாதிபதி செயலகம்) சாதாரண மக்களை மோசமாக தாக்கினர். வடக்கு, கிழக்கை புலிகள், விடுதலைப்புலிகள் என பிரித்தனர். இப்போது என்ன சொல்ல போகிறீர்கள். தற்போதாவது தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பயணத்தடை மேலும் நீடிப்பு!
READ MORE >>>  வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை
Previous articleவீதியோரத்தில் பெண் சிசுவொன்று உயிருடன் மீட்பு
Next articleதமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு – இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!