சமீபகாலமாக திரையுகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் மீனா பிரேம் குமார் நடிப்பில் வெளியான கண்ணம்மா படத்தைத் தயாரித்து இயக்கியவர் பாபா விக்ரம். இது தவிர இவர் கருணாஸ், கோவை சரளா, ஆகியோர் நடித்த பொம்மை நாய்கள் என்ற படத்தையும் இயக்கி தயாரித்தார்.தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் உருவாகி வரும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி தயாரித்து வந்தார்.
ஆழ்வார்குறிச்சியில் பாபா கோவிலை எழுப்பி வழிபட்டு வரும் இவருக்கு 82 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.