Home Cinema பிரபல சீரியல் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம் ‘ திரைப்படத்தில் உள்ளாரா வெளியான அப்டேட் இதோ...

பிரபல சீரியல் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம் ‘ திரைப்படத்தில் உள்ளாரா வெளியான அப்டேட் இதோ !!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு மே 15 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு படத்திற்காக தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.

மேலும், விக்ரமின் முதல் சிங்கிள் பாடல் நேற்று மே 11ம் தேதி வெளியானது. ‘பாதலா பாதலா’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை கமல் எழுதிப் பாடியுள்ளார். சாண்டி மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி மற்றும் மைனா நந்தினி நடிக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ நடித்துள்ளார். இதனை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனை நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இவர் இசையமைப்பாளர் கணேஷின் மகன். 20 வருடங்களாக சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான அகல்யா, ஆனந்தம், மேகலா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வானத்தை போல என்ற சீரியலில் சின்ராசுவாக நடித்து வருகிறார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleடாப்ஸியின் அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Next articleஇன்றைய ராசிபலன் இதோ !!