Home முல்லைத்தீவு செய்திகள் பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!

பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் தங்கும் விடுதி மற்றும் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சில நாட்களாக எரிபொருள் வரவில்லை. நாட்கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று பிரதேச செயலக வாகனம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்பியது.

இதன்போது, சிறிய கொள்கலன் ஒன்றில் பெற்றோல் நிரப்பப்பட்டு, வாகனத்தில் ஏற்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இதை தொடர்ந்து பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நேற்று இரவு, பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ குளியலறையிலிருந்தும், அலுவலக களஞ்சியசாலையிலிருந்தும் 110 லீற்றர் டீசல், 10 லீற்றர் பெற்றோல், 4 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டன.

இதன்போது மீட்கப்பட்ட எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  24 மணி நேரத்தில் 6 பேர் விபத்துக்களில் மரணம்!
READ MORE >>>  மீண்டும் புதிய மாற்றம் - நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவிப்பு
Previous articleதொடர்ந்து – மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!
Next articleமுகக்கவசம் அணியாமல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை