Home Local news பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விகிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் இடம்பெறவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபதவியேற்றவுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
Next articleபிரதமராக பதவியேற்ற ரணில்: விகாரையில் விசேட வழிபாடு