Home Local news பியர் அருந்தும் 04 வயது சிறுவன்! ஒருவர் கைது

பியர் அருந்தும் 04 வயது சிறுவன்! ஒருவர் கைது

குழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சி யொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹான தெரிவித்துள்ளதாவது, “பெலியகோட புதிய சாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பெலியகொட பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பியர் அருந்தும் 04 வயது சிறுவன்! ஒருவர் கைது

அதாவது 04 வயது குழந்தையை பீர் போத்தலில் இருந்து பீர் குடிக்க அனுமதித்த குற்றச்சாட்டிற்காகவே 25 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ஒரு நபர் 18 வயதுக்குக் குறைவான ஒருவருக்கு உற்சாக பானம் அல்லது புகையிலை பொருட்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அது இலங்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொவிட் தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் 101 உயிரிழப்புகள் !
Next articleயாழில் இலேசாக திறந்திருந்த கதவினால் சிக்கிய யுவதி