தமிழ் சினிமாவில் தன் உழைப்பால் மிகப்பெரிய உயரத்தை தொட்டவர்கள் வரிசையில் இருப்பவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து பின் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதன்பின் எதிர்நீச்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றார்.
பின் ரெமோ, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை அடுத்து 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது கையில் டான், அயலான், எஸ்கே 20 போன்ற படங்களையும் வைத்துள்ளார்.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் படம் வரும் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் உருவாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒருசில காட்சிகள் காப்பி அடித்துள்ளதாக சிலர் இணையத்தில் கருத்துக்களை கூறி பகிர்ந்து வருகிறார்கள். தற்போது 1999ல் எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் சிம்ரன் பேசிய ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் இடம்பெற்றுள்ளது.
எஸ்ஜே சூர்யா பேசும் அதே வசனத்தை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகிறார்கள். இதை கண்ட எஸ்ஜே சூர்யா அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதை நீங்களே இப்படி கலாய்க்கலாமா சார் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
— S J Suryah (@iam_SJSuryah) May 7, 2022