பா.மா.கா கையில் சிக்கி சின்னாபினமான சூர்யா தலையில் துண்டை போட்ட பட நிர்வாகம் !சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ஆனால் சூர்யா நடிப்பில் தியேட்டரில் 3 ஆண்டுகளாக வெளியாகமல் இருந்த நிலையில் எதற்கு துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியானது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் முதல் நாளே 14 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் படத்தின் எதிர்ப்பார்ப்பை விட வசூலும் கம்மிதான் என்று பலர் கூறி வருகிறார்கள். அதிலும் பல தியேட்டர்கள் காலியாக இருப்பதாக புகைப்படங்கள் அதைவைத்த மீம்ஸ்களும் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
😭💔#ETDisaster#Tier3ActorSURIYA
pic.twitter.com/7UDVJdgujk https://t.co/aru1lULfxA— vaadivasal saguni™ (@saguni_tweets) March 12, 2022
#ETDisaster disaster dhan bro
Attu Flop 👎 @Suriya_offl https://t.co/J8wijeasgU— Manjal💛தமிழன்® OMR 🦅 (@Manjal_1) March 12, 2022
இந்நிலையில் இப்படத்தில் விஜய் டிவி பிரபலங்களின் நடிப்பு எதற்கு வைத்தார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார். தங்கதுறை, ராமர், புகழ் போன்றவர்களின் காமெடியும் நடிப்பும் படத்தில் ஒர்க்கவுட் ஆகவில்லை.
அதற்கு பதில் இயக்குனர் வேறு காட்சிகளை வைத்திருக்கலாம் என்று புலம்பி வருகிறார்கள். இதனால் போட்ட பணத்தை கூட படம் எடுக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
அது ஒருபுறம் இருக்க மறுபுறமோ ஆனால் படத்தில் முதல் பாதி படு மொக்கையாக இருக்கிறது, இரண்டாம் பாதியில் கதை ஓரளவு கை கொடுத்தாலும் கதைக்கு தேவையற்ற கட்சிகளால் இரண்டாம் பாதியும் சொல்லும்படியாக இல்லை. விஜய் தொலைக்காட்சி பிரபலன்களான, குக் வித் கோமாளி புகழ், பழைய ஜோக் தங்கதுரை, ராமர் போன்றவர்கள் எதற்காக இந்த படத்தில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எழும் வகையில் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெறுப்படைய செய்துள்ளது.
சூர்யாவின் பெற்றோர்களாக வரும் சரண்யா, சத்யராஜ் ஆகியோரை இயக்குனர் சரியாக பயன்படுத்த வில்லை என்றே சொல்லலாம், மேலும் படத்தை ஆழமாக ஆராய்ந்து விமர்சனம் செய்தால், படத்தின் கதையில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளது என்பதை உணரலாம், மொத்தத்தில் படம் பற்றிய மக்கள் விமர்சனம் என்ன என்பதை தமிழகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் கருத்துக்களை பார்க்கும் போது எதற்கும் துணிந்தவன் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் ஒரு பக்கம் வன்னிய சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக அந்த சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் உள்ள எதற்கும் துணிந்தவன் வெளியான திரையரங்குகள் காற்று வாங்கி கொண்டிருக்கிறது, மற்ற பகுதிகளில் படம் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை, இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட்டத்தை சரி செய்ய அந்த படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வன்னிய சமூகத்தினரின் எதிர்ப்பின் காரணமாக மண்ணை கவ்வியதை தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படத்தை தயாரிக்க ரெடியாக இருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தயக்கம் காட்டி சூர்யாவின் புதிய படத்தை கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யாவின் புதிய படங்களை அவர் சொந்தமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை பொறுத்த வரையில் பா ம க கட்சியை பகைத்துக்கொண்டதால் அந்த கட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் சூர்யா மற்றும் அவரது ரசிகர்களும் ..