Home ஏறாவூர் செய்திகள் பாழடைந்த காணியில் சிசு சடலமாக மீட்பு: 15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய உத்தியோகத்தர் கைது

பாழடைந்த காணியில் சிசு சடலமாக மீட்பு: 15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய உத்தியோகத்தர் கைது

பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பிரசவித்த 15 வயதான சிறுமியும், கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது.

அந்த சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார்ர் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண்ணொருவர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அப்போது, 15 வயதான சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி, அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

கர்ப்பமடைந்த சிறுமி, பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், இன்று (24) காலை 9 மணியளவில் சிசுவை பிரசவித்துள்ளார்.

தனது வீட்டில் வைத்தே சிசுவை பிரசவித்த அச்சிறுமி, வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த காணியில் அச்சிறுவை வீசியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசார​ணையில் இருந்து தெரியவந்துள்ளது

இதனையடுத்து 29 வயதான உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​அத்துடன், கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவேன் – பஸ் விபத்தில் ஒருவர் மரணம்; 6 பேர் காயம்
Next articleஇன்றைய ராசிபலன் – 25/01/2023, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..