களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் உலகநாயகன் கமல்.தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ள உலகநாயகன் நடிப்பதில் மட்டுமன்றி நடனம் ஆடுவதிலும் பாடல் படிப்பதிலும் தனித்திறமை கொண்டுள்ளார்.
200க்கு மேற்பட்ட படங்களில் நடித்த கமல் தேசிய விருதையும் பெற்றுள்ளார் . இந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த இப்படம் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் கமலை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருந்தது போல் மேக்கப் போட்டிருக்கும் நபர் ஒருவரின் வீடியோ வெளிவந்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
Just tried @ikamalhaasan sir’s getup from #vikram #VikramAudioLaunch #VikramTrailer #Vikram @Dir_Lokesh @anirudhofficial #Trending pic.twitter.com/xzMmiQL1TQ
— SD1988 (@ZEXAXCYVMEhyVJ3) May 16, 2022