பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இயக்குநராக வலம் வருபவர் தான் பார்த்திபன். இவர் இயக்கத்தில் தற்பொழுது இரவின் நிழல் என்னும் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இதையடுத்து சர்வதேச அளவில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி இப்படம் வரும் ஜூன் 24ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எனினும் தற்போது ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..