சுதா கொங்கரா – ஹாம்பலே கூட்டணி அடுத்ததாக உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்க உள்ள திரைப்படத்தை தயாரிக்க உள்ளதால் அந்த படத்திற்கு யார் ஹீரோவாக போடலாம் என சினிமா வட்டாரத்தில் சில பல ஆலோசனைகள் நடந்து வருகிறது.இதுவும் ஒரு பெரிய பான் இந்தியா படமாக அமைய இருப்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.
ஏற்கெனவே சூரியா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்து வந்தது.ஆனால் சூரியா தற்போது இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் நிலையில் அந்த படங்கள் முடிந்த பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியாவின் 2டி நிறுவனம் தான் அவர் படத்தை தயாரிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த செய்தி கேட்டு திரை வட்டாரங்கள், ரசிகர்கள் உட்பட பான் இந்தியா படம்னா ஊர் ஊராக போய் படத்தின் புரொமோஷன்லாம் பண்ணனுமே அஜித் வருவாரா இதற்கெல்லாம் என்ற சிலபல கேள்விகள் எழுந்து வருகிறது. அப்படி இது நடந்து அஜித் வந்து விட்டால் இனிமே அவரை வெளியில் கூடிய சீக்கிரம் பாக்கலாம்.
இந்தியா முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஹீரோ இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ள நிலையில் இந்த படத்தையும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.
சுதா கொங்கராஅடுத்த படம் இந்திய திரை உலகின் மாபெரும் பிரம்மாண்டமான ஒரு வரலாற்று படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.