Home Tamil News பாதுகாப்பு படை வீரர் கஞ்சாவுடன் கைது

பாதுகாப்பு படை வீரர் கஞ்சாவுடன் கைது

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவில் பாதுகாப்பு படை வீரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று (23) ஆஜர்படுத்தியபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை – மிகிந்தபுர பகுதியைச் சேர்ந்த ஏட்டிரியல் ரொஷான் சுமதிபால (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையை கடற்கரை பகுதியில் இரகசியமான முறையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக துறைமுக பொலிஸாருக்கு

வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறிலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நல்லடக்கம்
Next article1Kg ஹெரோயினுடன் சிக்கிய 25 வயது யுவதி