Home Cinema பாடல்களே இல்லாமல் உருவாகும் தளபதி67 !! இந்த முறை அவர் வேண்டாம் இவரே போதும்...

பாடல்களே இல்லாமல் உருவாகும் தளபதி67 !! இந்த முறை அவர் வேண்டாம் இவரே போதும் !! வைரலாகும் உண்மை தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தையும் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் இயற்றினார்.

இப்படங்கள் கொடுத்த ஹிட்டைத் தொடர்ந்து தற்பொழுது கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் தான் இயக்கப் போவதாக கூறப்படுகின்றது.

அத்தோடு தளபதி 67 படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் கைதி படத்தை இயக்கியது போல ஒரே நாளில் படத்தை முடிப்பது போலவும் ஹீரோயின் இல்லாமல் ஒரு ராவான ஆக்சன் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு அனிரூத் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் படத்திற்கு அனிரூத் தான் இசையமைத்திருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்திற்கும் அனிரூத் தான் இசையமைத்துள்ளார். இதனால் தளபதி 67 இல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-யி இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleAK 61 படத்தின் பாடல் மற்றும் BGM பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!! தியேட்டர் கிழிய​ போகுது உறுதி
Next articleஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களா நீங்கள் ! இத சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரிய நன்மைகள்